Tamil Live Breaking News: ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம்

By
On:
Follow Us


September 12, 2024, 9:29 am IST

Tamil Live Breaking News: அக்டோபர் 15-ல் தமிழக வெற்றிக் கழக மாநாடு?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 23ம் தேதி தொடங்கவிருந்த நிலையில் அனுமதி தாமதம் காரணமா தேதி மாற்றப்படும் எனத் தெரிகிறது. அதன்படி, அக்டோபர் மாதம் 15ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, இன்று நடிகர் விஜய் தவெக முதல் மாநாடு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.

September 12, 2024, 4:01 pm IST

Tamil Live Breaking News: சீதாராம் யெச்சூரி காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) காலமானார்.

September 12, 2024, 2:31 pm IST

Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு செய்திகள் நேரலை

விளம்பரம்
September 12, 2024, 12:35 pm IST

Tamil Live Breaking News: ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு!

பத்தாண்டுகளாக ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள், அதனை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI அமைப்பு அறிவித்திருந்தது. அதற்கான கடைசி தேதியாக நாளை மறுநாள் (செப்.14) அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆதார் சென்டர்களில் கூட்டம் அதிகரித்தது. இந்நிலையில் ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீடித்து UIDAI அறிவித்துள்ளது.

September 12, 2024, 12:03 pm IST

Tamil Live Breaking News: பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து: முறைகேடாக நடந்த மதுரை விடுதி

மதுரையில் இன்று காலை மகளிர் விடுதி ஒன்றில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் இரு பெண்கள் பரிமலா, சரண்யா உயிரிழந்தனர். இதற்கிடையே, தீ விபத்துக்குள்ளான விடுதி கட்டிடத்தை கடந்த ஆண்டே இடிக்க சொல்லி மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியதும், மருத்துவமனைக்கு அனுமதி பெற்றுவிட்டு, விடுதி நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

September 12, 2024, 12:00 pm IST

Tamil Live Breaking News: மீண்டும் அதிமுகவில் இணையும் மைத்ரேயன்?

2023-ல் பாஜகவில் இணைந்த நிலையில் மீண்டும் அதிமுகவில் மைத்ரேயன் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் மைத்ரேயன் சந்தித்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக மைத்ரேயன் கூறியுள்ளார்.

விளம்பரம்
September 12, 2024, 11:59 am IST

Tamil Live Breaking News: ஐஐடி நுழைவுவாயில் முன்பாக பெற்றோர்கள் போராட்டம்!

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை அனுப்ப வரும் பெற்றோர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து வேளச்சேரி நுழைவு வாயில் முன் பெற்றோர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். 20 கிமீ வேகத்தில் சென்றால் ரூ.10,000 அபராதம் மற்றும் 6ஆம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி வளாகத்துக்குள் அனுமதி மறுப்பு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

September 12, 2024, 10:29 am IST

Tamil Live Breaking News: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். செங்கப்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான நபர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடைசி நேரத்தில் மருத்துவமனை வந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

September 12, 2024, 9:36 am IST

Tamil Live Breaking News: மதுரை விடுதி தீ விபத்து: உரிமையாளர் கைது!

மதுரை மகளிர் விடுதியில் பிரிட்ஜ் வெடித்த விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த நிலையில், விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக விடுதி உரிமையாளர் இன்பா என்ற பெண் கைது செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். தீ விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், விடுதி வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விளம்பரம்
September 12, 2024, 9:33 am IST

Tamil Live Breaking News: தமிழ்நாட்டில் கேட்டர்பில்லர் நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவின் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கட்டுமான கருவிகள் உற்பத்தியை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

September 12, 2024, 9:29 am IST

Tamil Live Breaking News: வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வு: சுடுமண்ணால் ஆன குவளை கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் உணவு அருந்தவோ அல்லது மண் பாண்டங்களின் மூடியாக பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

September 12, 2024, 9:30 am IST

Tamil Live Breaking News: பெங்கல் பண்டிகை : ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

2025 ஆம் ஆண்டு பெங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 10 ஆம் தேதி பயணம் மேற்கொள்வதற்கான பயண டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. IRCTC செயலி மூலமாகவும், இரயில் நிலைய டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் தற்போது டிக்கெட் விற்பனை தொடங்கி உள்ளது

விளம்பரம்
September 12, 2024, 9:23 am IST

Tamil Live Breaking News: திருப்பூர் அழைத்துச் சென்று மகாவிஷ்ணுவிடம் விசாரணை!

அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை குறித்து சர்ச்சையாக பேசிய பேச்சாளர் மகாவிஷ்ணுவை விசாரணைக்காக சைதாப்பேட்டை போலீசார் திருப்பூர் அழைத்துச் சென்றுள்ளனர். திருப்பூரில் உள்ள அவருக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளையில் விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரணையில் உள்ள மகாவிஷ்ணுவை நேற்று இரவு சைதாப்பேட்டை போலீசார் திருப்பூர் அழைத்துச் சென்ற நிலையில், மகாவிஷ்ணுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி விசாரணை நடத்த உள்ளனர்.

September 12, 2024, 9:23 am IST

Tamil Live Breaking News: சிதம்பரம் அருகே அதிகாலையில் நடந்த கோர விபத்து! – 5 பேர் பலி

சிதம்பரம் அருகே பு.முட்லூர் புறவழிச் சாலையில் இன்று அதிகாலை காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர். யாசர் அராபத் (40), முகமது அன்வர் (56), ஹாஜிதா பேகம் (62), சாராபாத் நிஷா (30), அப்னான் (2) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை சந்தித்துவிட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கியுள்ளனர்.

September 12, 2024, 9:23 am IST

Tamil Live Breaking News: பொங்கலுக்காக ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு.. – ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. IRCTC இணையதளம் மற்றும் டிக்கெட் முன்பதிவு மையங்களில் டிக்கெட்டை பதிவு செய்யலாம். தொலைதூர பயண வசதிக்காக டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்னரே தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
September 12, 2024, 9:23 am IST

Tamil Live Breaking News: மதுரையில் பிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து – 2 பேர் பலி!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா பெண்கள் விடுதியில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பழைய பிரிட்ஜ் ஒன்று வெடித்துள்ளது. இதன் காரணமாக விடுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில் மாணவிகள் அவசர அவசரமாக வெளியேறி உள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த மதுரை பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் கடந்த ஒரு மணி நேரமாக போராடி புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விடுதியில் தங்கியிருந்த மூன்று மாணவிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேர் உயிரிழந்தனர். பரிமளா, சரண்யா ஆகிய இருவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

September 12, 2024, 9:23 am IST

Tamil Live Breaking News: நாகை: மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் கடற்படையினரை கண்டித்து நாகை மாவட்டம் செருதூரில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 400க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இலங்கை அரசுடன் சமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

September 12, 2024, 9:23 am IST

Tamil Live Breaking News: தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் – பதக்க வேட்டையில் இந்தியா!

சென்னையில் தொடங்கியுள்ள தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாடு வீராங்கனை அபிநயா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முதல் நாள் நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் 9 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

மூன்று நாட்கள் நடைபெறக்கூடிய இந்தத் தொடரின் முதல் நாளில் 6 பிரிவுகளில் இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டன. ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினர். இந்திய வீரர் சித்தார்த் 19.19 மீட்டர் தூரம் குண்டு எறிந்து முதலிடம் பிடித்து அசத்தினார். மகளிர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா 1.80 மீட்டர் உயரம் தாண்டி தெற்காசிய அளவிலான புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தினார்.

விளம்பரம்
  • First Published :

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements