இலவசமாக பெற விண்ணப்பிக்கும்  முறை இதோ ..!! – News18 தமிழ்

By
On:
Follow Us

தென்காசி மாவட்டத்தில் சலவைத் தொழிலை மேற்கொள்ளும் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்திற்குள், ஏழை எளிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

LPG மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள்:

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இன மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக இத்துறையின் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு முக்கியமான திட்டம் சலவைத் தொழிலை மேற்கொள்ளும், ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கரியால் இயங்கும் பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டமாகும்.

விளம்பரம்

தற்போதுபித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு பதிலாக திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப, புதிய முன்னெடுப்பாக, தற்போது வழங்கப்பட்டு வரும் பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு பதிலாக திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் 1200 பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனதமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்க : இயற்க்கை விரும்பிகளுக்கு ஒரு அருமையான ஸ்பாட்….கட்டாயம் ஒரு விசிட் அடிக்கலாம் வாங்க..!!

விளம்பரம்

இத்திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள சலவைத் தொழிலைமேற்கொள்ளும் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்திற்குள், ஏழை எளிய மிகப்பிற்படுத்தப்பட்டோர் இன சலவைத் தொழிலை மேற்கொள்ளும் மக்கள் திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய இடம்: விண்ணப்பங்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

.

நன்றிk

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements