தென்காசி மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தில் பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் மேளா சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
**எங்கு, எப்பொழுது நடைபெறும் ?**தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் மேளா 23.09.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சேர்க்கை முகாம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஒராண்டு தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தற்போது 2024 -ம் பயிற்சி பெற்று தேர்வு எழுதி முடித்தவர்களும், தொழில் பழகுநர் பயிற்சி அல்லது வேலைவாய்ப்பிற்கான முகாமில் கலந்து கொள்ளலாம். பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் மேளா மத்திய, மாநில அரசு தனியார் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் (Industries clusters) கொண்டு நடத்தப்படுகின்றது.
தகுதி: இம்முகாமில் ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்கள் தொழில் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் நேஷனல் அப்பரண்டிஷிப் சர்டிபிகேட் (NAC) பெற்று பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
**விவரங்களுக்கு:**வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.