தென்காசி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற பெண்களின் பிரதான தொழிலாக பீடி சுற்றும் தொழில் இருந்து வருகிறது. அதிலிருந்து விலகி,மாறுப்பட்டுகுறிப்பிட்ட அளவில் பெண்கள் சுய தொழில் தற்போது தொடங்க ஆரம்பித்துள்ளனர்.அப்படி பீடி சுத்திட்டு இருந்து, இப்போ கேண்டீன் உரிமையாளரா இருக்கிறவங்க தான் சுரண்டையை சார்ந்த சுய உதவி குழு பெண்கள்.
தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி இயங்கிக்கொண்டு இருக்கும் கேண்டீன் மகளிர் சுய உதவி குழு பெண்களால் மதிமகள் உணவகம் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
பொதுவாக காலேஜ் கேண்டீன் என்றாலே தனியார் காண்ட்ராக்ட் நிறுவனங்களுக்கு தான் வழங்கப்படும் ஆனால் தென்காசியில் முதல் முறையாக சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் மகளிர் சுய உதவி குழு பெண்களால் நடத்தப்பட்டு வருகிறது. சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் போதிய உணவக வசதி இல்லாததால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
மதிமகள் உணவகம் தொடங்கப்பட்ட பின்பு மாணவர்களுக்கு இது பெரிதும் பயன்படுவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த உணவகத்தின் மூலம் பீடி சுத்தி வந்த பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்து இருப்பதாகவும் மதிமகள் உணவகம் பெண்தெரிவிக்கின்றனர். கேண்டீன் துவங்குவதற்கு முன்பு வாரத்திற்கு ரூ.2000 மட்டுமே வருமானம் பார்த்து வந்ததாகவும், தற்போது கேண்டீன் ஆரம்பித்த பிறகு 2 மடங்கு வருமானம் பார்த்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மேலும் பீடி சுற்றும் தொழில் பார்த்தபோது அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு குடும்பத்தை பார்த்து கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டு வந்துள்ளது. ஆனால், தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் இந்த சாதனை பெண்மணிகள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
- First Published :