இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் வேறுபட்டது. திருமணத்தைப் பொறுத்த வரையில், நம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் திருமணத்திற்குப் பிறகு மணப்பெண்தான், தன் கணவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
உலகெங்கிலும் உள்ள எல்லா மதங்களிலும் கடைபிடிக்கும் பாரம்பரியமும் இதுதான். ஆனால் மேகாலயாவில், காசி பழங்குடியினர் மத்தியில் ஒரு வித்தியாசமான பாரம்பரியம் உள்ளது. அதாவது இங்கு மணமகன் தனது வீட்டை விட்டு வெளியேறி மனைவி வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள காசி பழங்குடியின சமூகத்தினரின் திருமண நடைமுறை மாறுபட்டது. இங்கு குடும்பத்தை நடத்துவதும் தாய் தான், தாயின் சொத்து தந்தையிடமிருந்து மகனுக்கு மாற்றப்படாமல், அவரது மகளுக்கு மாற்றப்படுகிறது.
மகளும், அவளுடைய குழந்தைகளும் திருமணத்திற்குப் பிறகு தாயின் குடும்பப் பெயரை வைத்திருக்கிறார்கள், மணமகன் தனது மாமியார் வீட்டில் வசிக்கிறார். அவர்களின் சமூகத்தில், பெண்களுக்கு முழு மரியாதை அளிக்கப்படுகிறது மற்றும் அவர்கள் ஆண்களை விட அதிக உரிமைகளைப் பெறுகிறார்கள். இதுமட்டுமல்லாமல், மணமகன்கள் திருமணத்திற்குப் பிறகு மணமகளின் வீட்டிற்கு செல்கிறார்கள். மேலும், இந்தச் சமூகத்தில் ஒவ்வொருவரும், தந்தையின் பெயருக்குப் பதிலாக தாயின் பெயரையே தங்கள் பெயருக்குப் பின்னால் வைக்கிறார்கள்.
இதையும் படிக்க:
குழந்தையுடன் ஆபத்தாக ரீல்ஸ் செய்த பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி… நெட்டிசன்கள் கொதிப்பு!
அறிக்கைகளின்படி, இந்த சமூகங்களில் பெண்கள்தான் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், இந்த மாநிலத்தில் ஒரே குலத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்யக் கூடாது. இங்கு திருமணங்களில் சில சுவாரஸ்யமான பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் உள்ளன, அதாவது பெண்கள்தான் திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் ஆண்களிடம் ப்ரபோஸ் செய்வார்கள். இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் வழங்கப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள் நிச்சயதார்த்தத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு அறிவார்கள்.
இதையும் படிக்க:
பராமரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த ராட்சத பாண்டா… பார்வையாளர்கள் ஷாக்… வைரல் வீடியோ!
முக்கியமாக, இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தால்தான் ஆண், பெண் திருமணம் நடக்கிறது. திருமணங்கள் மணமகளின் வீட்டில் நடைபெறுகிறது மற்றும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் மோதிரங்கள் அல்லது வெற்றிலை பாக்குகளை பரிமாறிக்கொள்கிறார்கள். மேலும், மேகாலயாவில் காசி பழங்குடியினர் மத்தியில் வரதட்சணை முறை இல்லை. பெண்கள் அனைத்து செல்வங்களுக்கும் ஒரே பாதுகாவலராகக் கருதப்படுகிறார்கள், மேலும் அவர்கள் மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் நடத்தப்படுகிறார்கள்.
கிழக்கு மேகாலயாவின் மொத்த மக்கள் தொகையில் 78.3% பேர் காசி மற்றும் ஜெயந்தியா மலைகளில் வசிக்கின்றனர். ஜைந்தியா மலைகளில் வசிக்கும் காசி பழங்குடியினர்கள் ஜெயின்டியாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பல ஊடக அறிக்கைகளின்படி, இந்தியாவில் காசி பழங்குடியினரின் மொத்த மக்கள் தொகை 1,427,711 ஆக உள்ளது.
.