₹5க்கு நவதானிய லட்டு… சிறுதானிய உணவக பிசினசில் கலக்கும் மகளிர் சுய உதவிக் குழு

By
On:
Follow Us

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு கலைக்கல்லூரியில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் நடத்தும் சிறுதானிய உணவகம் கடந்த ஒரு மாதமாக செயல்பட்டு வருகிறது.ஒரு குழுவிலுள்ள 12 பெண்களும் இதழ் விற்பனையாளராக சுழற்சி முறையில் செயல்பட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு மூன்று பெண்கள் உணவகத்தில் பணியாற்றியும், மற்ற பெண்கள் அதற்கு தேவையான வேலைகளை செய்து கொடுத்தும் வருகின்றனர்.

சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரியை பொருத்தவரை உணவகங்கள் கிடையாது. மாணவர்கள் வெளியில் சென்று உணவுகளை வாங்கி அருந்தும் சூழல்தான் இருந்து வந்தது. தற்போது செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறுதானிய உணவகம் தென்காசி மாவட்ட ஆட்சியரால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் fast food உணவுகளையே அதிகம் விரும்புவதால், அவர்கள் மத்தியில் சிறுதானிய உணவுகளை கொண்டு சேர்ப்பதற்கு ஆரம்ப காலகட்டத்தில் இவர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது.

விளம்பரம்

மேலும் சிறுதானிய உணவுகள் விலை அதிகமாக இருப்பதாலும் மாணவர்கள் அதனை பெரிதும் வாங்குவதில்லை என்பதனை கவனித்த இவர்கள் அதற்கு மாற்று வழியாக சிறுதானியத்தில் செய்யப்படும் லட்டு, முறுக்கு, புட்டு போன்ற பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினர். ரூ.5 க்கு சிறுதானிய லட்டு, முறுக்கு தயார் செய்து விற்பனை செய்வது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மதி சிறு தானிய உணவகத்தில் 5 ரூபாயில் இருந்து 30 ரூபாய் வரை தான் உணவுப் பொருட்கள் விற்பனை செய்கின்றனர்.

விளம்பரம்

இதையும் வாசிக்க : செல்லப் பிராணிகளை எப்படி வளர்க்கணும் தெரியுமா ? டாக்டர் கூறும் அட்வைஸ் இதோ..!!

ஆரம்பகாலகட்டத்தில் ஒரு நாளைக்கு 300 ரூபாய் மட்டுமே கிடைத்த இவர்களுக்கு தற்போது ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து லாபம் பார்த்து வருகின்றனர். கேழ்வரகு லட்டு, உளுந்து லட்டு, கம்பு லட்டு, திணை லட்டு என பத்துக்கும் மேற்பட்ட லட்டு வகைகளும், கம்பு முறுக்கு சோழ முறுக்கு கேழ்வரகு முறுக்கு போன்ற முறுக்கு வகைகளும், முளைகட்டிய கம்பு, முளைகட்டிய பாசிப்பயறு, மொச்சை பயறு, சுண்டல், முருங்கை கீரை சூப், சுக்கு டீ, அவள் பாயசம், என சிறுதானியத்தால் செய்யப்பட்ட எக்கச்சக்கமான உணவு வகைகள் இவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

விளம்பரம்

மேலும் இவர்கள் தயார் செய்யும் உணவுகளில் நெய் மற்றும் அரிசி சேர்ப்பது கிடையாது. இவர்கள் பயன்படுத்தும் சிறுதானியம், நிலக்கடலை, தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களும் சுய உதவி குழு பெண்களிடம் இருந்தே வாங்குகின்றனர். இது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவுகின்றது.பீடி சுற்றும் தொழில் செய்து ஒரு நாளைக்கு 70 ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்த தங்களுக்கு இது ஒரு சிறந்த மாற்று தொழிலாகவும் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தியதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர், சங்கரன்கோவில் சுய உதவி குழு பெண்கள்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.

நன்றிk

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements