பட்டாசு கடை வைக்கப்போறீங்களா ? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க..!!

By
On:
Follow Us

தென்காசி மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி தற்காலிகமாகப் பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற (https://www.tnesevai.tn.gov.in) இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தென்காசி மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன்கீழ் தற்காலிகமாகப் பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற 19.10.2024 வரை (https://www.tnesevai.tn.gov.in) விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

விண்ணப்பதாரர்கள் கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான புளு பிரிண்ட் வரைபடம், கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் அல்லது வாடகைக் கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் உரிமத்தினைக் காட்டும் ஆவணம், உரிமத்திற்கான கட்டணம் ரூ.500 அரசுக் கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலான், இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் அட்டை / வாக்காளர் அடையாளஅட்டை / குடும்ப அட்டை), வரி ரசீது, புகைப்படம் 2 (பாஸ்போர்ட் சைஸ்) ஆகிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.

விளம்பரம்

இதையும் வாசிக்க : புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஹைதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை துவக்கம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: இ-சேவை மையங்களில் 19.10.2024-க்கு பின் பெறப்படும் இணையதள விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.மேலும், நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தல் வேண்டுபவருக்கு இவ்வழிமுறை பொருந்தாது.உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

.

நன்றிk

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements