ரத்தன் டாடா உருவத்தை மார்பில் டாட்டூ குத்திக் கொண்ட நபர்…!! நெகிழ வைக்கும் காரணம்…

By
On:
Follow Us

நாட்டின் மிகவும் விரும்பப்படும் மற்றும் மதிக்கப்படும் தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த ரத்தன் டாடாவின் மறைவு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நாட்டின் பல பகுதிகளில் இன்னும் பார்க்க முடிகிறது. இந்தியா உண்மையிலேயே ஒரு ‘கோஹினூரை’ இழந்தது என்று சொல்லும் அளவுக்கு பணக்காரர்கள் முதல் ஏழை மக்கள் வரை பலர் மத்தியில் ரத்தன் டாடாவின் மறைவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்தான் மும்பையைச் சேர்ந்த ஒரு நபர் மறைந்த ரத்தன் டாடாவின் முகத்தை தனது மார்பில் பச்சை குத்திக்கொள்ளும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த ரத்தன் டாடாவின் முகத்தை மார்பில் பச்சை குத்தும் அளவிற்கு அந்த பாமர மனிதருக்கும் – ரத்தன் டாடாவிற்கும் உள்ள தொடர்பு என்ன?!! இவரது செயலுக்கு பின்னால் உள்ள கதை பற்றி இங்கே பார்க்கலாம்.

விளம்பரம்

பிரபல டாட்டூ ஆர்ட்டிஸ்ட் மகேஷ் சவான் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள வீடியோ, ரத்தன் டாடாவின் உருவப்படத்தை ஒரு நபரின் மார்பில் பச்சை குத்துவதைக் காட்டுகிறது. “இந்தியா ஒரு லெஜென்ட்டை இழந்துவிட்டது” என்று கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ரத்தன் டாட்டாவின் உருவத்தை டாட்டூவை குத்திக்கொண்டு கவுரவிக்க ஏன் முடிவு செய்தீர்கள் என்று அந்த நபரிடம் சவான் கேட்கிறார். அதற்கு அந்த நபர் ரத்தன் டாடா மீதான தனக்கு இருக்கும் மிகப்பெரிய மரியாதையை விளக்கினார். டாடா அறக்கட்டளை தனது நெருங்கிய நண்பரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதைப் பற்றிய இதயப்பூர்வமான கதையை பகிர்ந்து கொண்டார்.

விளம்பரம்

அந்த நபர் தனது நெருங்கிய நண்பருக்கு கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை மற்றும் மருத்துவச் செலவுகளை சமாளிக்க போதிய பணம் இல்லாமல் பெரும் போராட்டத்தை எதிர்கொண்ட கடினமான காலக்கட்டத்தை நினைவு கூர்ந்தார். நாங்கள் ஆலோசனைக்காக பல மருத்துவமனைகளுக்குச்சென்றோம், ஆனால் அவர்கள் அனைவரும் எங்களால் தாங்க முடியாத அளவுக்கு சிகிச்சைக்கான செலவை கூறினர்.

இதையும் படிக்க:
நடனமாடிக் கொண்டிருந்தபோது “கர்பா கிங்”-ற்கு நடந்த சோகம்!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

கேன்சருக்கு மலிவு விலையில் சிகிச்சை கிடைக்காமல் நண்பர் உயிருக்கு போராடிய நிலையில், டாடா அறக்கட்டளை பற்றி கேள்விப்பட்டு சென்றதாகவும், இறுதியில் அந்த அறக்கட்டளை தனது நண்பருக்கு வந்த கொடூர புற்றுநோய்க்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் சேவையை வழங்கி தங்களின் மனபாரம் மற்றும் நிதிச் சுமையைக் குறைத்ததாகவும் குறிப்பிட்டார். எனது நண்பரின் உயிரைக் காப்பாற்றியது ரத்தன் டாடாவிற்கு சொந்தமான அறக்கட்டளை என்பதால் அவரது உருவப்படத்தை மார்பில் டாட்டூ குத்திக்கொள்ள முடிவு செய்ததாக கூறினார். என் நண்பன் கேன்சரிலிருந்து மீண்டு வர அவருக்கு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆனது. எனவே ரத்தன் டாடா மற்றும் அவரது அமைப்புக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர் எங்களைப் போல் எத்தனை பேருக்கு உதவியிருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை. எனவே அவர் தான் எனக்கு உண்மையான கடவுள் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

விளம்பரம்
விளம்பரம்

 

ரத்தன் டாடா நம்முடன் இல்லாமல் போகலாம், ஆனால் இது போன்ற அஞ்சலிகள் மூலம் அவரிடமிருந்த கருணை, மனிதாபிமானம் உள்ளிட்ட பல நற்பண்புகள் மூலம் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்வார்.

.

நன்றிk

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements