ஈபிஎஸ்க்கு நெருக்கமானவர் இடங்களில் ஐ.டி சோதனை! – News18 தமிழ்

By
On:
Follow Us


October 23, 2024, 9:24 am IST

Tamil Live Breaking News: வங்கக்கடலில் உருவானது ‘டானா’ புயல்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு 11.30 மணி நிலவரப்படி, ஒடிசாவுக்கு தென்கிழக்கே 670 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்துக்கு தென்கிழக்கே 720 கிலோமீட்டர் தொலைவிலும் 3 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த நிலையில் தற்போது புயலாக வலுப்பெற்றது. இதற்கு டானா எனப் பெயரிடப்பட்டுள்ளது. டானா புயல், வடமேற்கு நோக்கி நகர்ந்து, தீவிர புயலாக வலுவடைந்து, நாளை இரவு வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை பூரி மற்றும் சாகர் தீவுக்கு இடையே கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

October 23, 2024, 11:48 am IST

Tamil Live Breaking News: நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி!

திருப்பத்தூரில் முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 3 மாத குழந்தைக்கு உதவி வேண்டுமென நியூஸ் 18 தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், அக்குழந்தையின் வீட்டில் அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகிண்டனர். பச்சூர் மருத்துவ அதிகாரி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர், குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தனர். தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர்.

October 23, 2024, 10:52 am IST

Tamil Live Breaking News: ஈபிஎஸ்க்கு நெருக்கமானவர் வீடுகளில் ஐ.டி சோதனை!

அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ்க்கு நெருக்கமானவர் இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

விளம்பரம்
October 23, 2024, 10:30 am IST

Tamil Live Breaking News: “மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் ஈபிஎஸ்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

“மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. செல்லாக்காசாக சார்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி திமுகவின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளதாக பேசிவருகிறார். திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. எங்கள் கூட்டணிக்குள் பிளவு வரும் என்று ஈபிஎஸ் பகல் கனவு காண வேண்டாம்.” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

October 23, 2024, 9:26 am IST

Tamil Live Breaking News: வள்ளலார் சர்வதேச மைய பணிகள் தொடக்கம்!

கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞான சபை வளாகத்தில் வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவமனை, முதியோர் இல்லம், தங்கும் விடுதிக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் மட்டும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன.

October 23, 2024, 9:24 am IST

Tamil Live Breaking News: 100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்

நீர்வரத்து உயர்வால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. கனமழையால் நீர்வரத்து விநாடிக்கு 17,586 கன அடியிலிருந்து 29,850 கன அடியாக அதிகரித்துள்ளது.

விளம்பரம்
October 23, 2024, 9:24 am IST

Tamil Live Breaking News: வேலூர் ஜெயிலர் சஸ்பெண்ட்

வேலூர் சிறையில் கைதி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் சிறைத்துறை டிஜஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டிஐஜி வீட்டில் பணம், நகை திருடியதாகக் கூறி கைதி சிவக்குமாரைத் தாக்கியதாக அவரது தாய் கலாவதி தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

October 23, 2024, 9:24 am IST

Tamil Live Breaking News: பெங்களூரு விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு

பெங்களூரு: பாபுசாபால்யா என்ற இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த 4 மாடிக் கட்டடம், கனமழையால் இடிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. கட்டட இடிபாடுகளில் 8 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

October 23, 2024, 9:24 am IST

Tamil Live Breaking News: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதல் சோதனை நடந்து வருகிறது. இதேபோல், சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 6 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதி நிர்வாகத்திடம் சாவி வாங்கி சோதனை நடப்பட்டு வருகிறது.

விளம்பரம்
  • First Published :

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements