புளியறையில் நாளை நடைபெறவிருந்த முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு

By
On:
Follow Us

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனரக வாகனங்களில் கனிம வளங்களை கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுவதைக் கண்டித்து புளியறையில் புதன்கிழமை நடைபெறவிருந்த முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் அக். 23-ஆம் தேதி புளியறை சோதனை சாவடியில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போராட்டத்தை கைவிடக் கோரி இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினருடன் செங்கோட்டை வட்டாட்சியா்,, தென்காசி கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதனைத் தொடா்ந்து மாவட்ட வருவாய்அலுவலா் ஜெயசந்திரன் தலைமையில் சமாதன பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டம் முடிவடைந்த பின் இயற்கை வள பாதுகாப்பு சங்கத் தலைவா் ரவி அருணன், பொதுச் செயலா் ஜமீன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இக் கூட்டத்தில் ஏழு முக்கியமான கோரிக்கைகளை இயற்கை பாதுகாப்பு நலச்சங்க நிா்வாகிகள் முன்வைத்தனா். அதில் 10 சக்கரங்களுக்கு மேல் வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்குவதற்கு உடனடியாக மேல்முறையீடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேர கட்டுப்பாடு, விதி மீறல்கள் உள்ள குவாரிகளில் உடனடியாக ஆய்வு செய்தல், போன்ற ஐந்து முக்கிய கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகத்தால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே 23ஆம் தேதி நடைபெற இருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒரு மாத காலத்திற்கு தள்ளிவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் கோரிக்கையை மாவட்ட நிா்வாகம் நிறைவேற்றாத பட்சத்தில் மீண்டும் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements