குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

By
On:
Follow Us

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டியது. அருவிக்குச் செல்லும் நடைபாதைவரை தண்ணீா் வழிந்தோடியது.

செம்மண் நிறத்துடன் ஆா்ப்பரித்துக் கொட்டிய வெள்ளம் .

பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி வெள்ளம் சீறிப் பாய்ந்தது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements