நகை வாங்குவது போல் நடித்து கொள்ளை.. நெல்லையில் டிப்டாப் வாலிபர்கள் கைவரிசை

By
On:
Follow Us

நெல்லை
மாவட்டம் திசையன்விளையில் நகைக் கடை வைத்திருப்பவர் இட்டமொழி அருகே உள்ள அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த மெய்கண்ட மூர்த்தி. இவர் தனது வேலை நிமித்தமாக காலையில்  குலசேகரப்பட்டினம் சென்றதால் தனது கடையில் பணிபுரிந்து வரும் கதிரேசன் என்பவரிடம்  நகைக்கடையை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் நன்பகல்  12:30 அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு  டிப்டாப் வாலிபர்கள் மெய்கண்ட மூர்த்தியின் நகைக்கடைக்கு நகை வாங்குவது போல் சென்றுள்ளனர். அங்கு சென்ற வாலிபர்கள் தாங்கள் புதிதாக கட்டப் போகும் வீட்டில் வாசல் நிலையின் அடியில் வைப்பதற்கு தங்கத் தகடுகள் மற்றும் நவரத்தினங்கள் கேட்டுள்ளனர். மேலும் தேவையான சில  நகைகள் வாங்குவது போல்  டிசைன்களை காட்டச் சொல்லி உள்ளனர்.

விளம்பரம்

Also Read: 
சிமெண்ட் விலை உயர்வால் திமுகவுக்கு ரூ.1500 கோடி கமிஷன் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மெய்கண்ட மூர்த்தியின் கடையில் பணிபுரிந்து வரும் கதிரேசன் பல மாடல்  தங்க நகைகளை  எடுத்துக்காட்ட டிசைன்கள் ஒன்றும் பிடித்தம் இல்லை எனக்கூறி புது புது மாடல்  நகைகளாக எடுத்து வைக்கச் சொல்லி உள்ளனர். கதிரேசன் ஒவ்வொரு நகையாக எடுத்து வைக்கும்போது  புதிய தங்க நகைகள் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மூஸ் என அழைக்கப்படும்  24 காரட் தங்கக்கட்டி, மற்றும் கோல்டு காயின்கள் ஒரு டப்பாவில் இருப்பதை நோட்டமிட்டுள்ளனர்.

விளம்பரம்

கடையில் பணிபுரியும் கதிரேசனின் கவனத்தை எப்படியோ திசைதிருப்பி டப்பாவில் வைக்கப்பட்டிருந்த கோல்ட் காயின் , தங்கக் கட்டி, மற்றும் பல சிறிய நகைகள் உட்பட 11 சவரன் தங்க கட்டி உள்ளிட்ட  நகைகளை லாவகமாக  எடுத்து மறைத்துக்கொண்டு வாசல்  நிலையின் அடியில் வைப்பதற்கு வாங்கிய பொருளுக்கு மட்டும் 1200 ரூபாயை கதிரேசனிடம்  கொடுத்துவிட்டு நல்லவர்கள்போல்  இருசக்கர வாகனத்தில் சென்று விட்டனர்

குலசேகரன்பட்டினம் சென்று விட்டு மதியம் மூன்று முப்பது மணிக்கு கடைக்கு  வந்த கடையின் உரிமையாளர் மெய்கண்ட மூர்த்தி தான் ஆர்டர் எடுத்த நகைகளை செய்வதற்கு தங்கக் கட்டிகளை தேடியபோது தங்கக்கட்டி , மற்றும் கோல்ட் காயின் மேலும் சில நகைகள் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கதிரேசனிடம்  விசாரித்தபோது தான் கதிரேசனுக்கு திருட்டு போனது தெரிய வந்துள்ளது.

விளம்பரம்

Also Read: 
சிவகங்கையில் இடி தாக்கி செல்போன் வெடித்து பிளம்பர் உயிரிழப்பு

உடனடியாக மெய்கண்ட மூர்த்தி தனது கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது இரண்டு டிப்டாப் வாலிபர்கள் கடைக்கு வந்து நகை வாங்குவது போல் நடித்து 11 பவுன் தங்கத்தை திருடி சென்றதை அறிந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக திசையன்விளை காவல் நிலையத்தில் தங்க நகை திருட்டு போன கடையின் உரிமையாளர் மெய்கண்ட மூர்த்தி புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் திசையன்விளை காவல் ஆய்வாளர் ஜமால் தலைமையிலான காவல்துறையினர் திருட்டு நடந்துள்ள கடைக்கு வருகை தந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements