உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நிலம் தொடர்பான வழக்கு நெடுங்காலமாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு இறுதியாக மூன்று மாதங்கள் விசாரணை நடைபெற்று, நவம்பர் மாதம் 9ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அப்போதைய தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஷர்த் அரவிந் போப்டே, அசோக் பூஷன், டி.ஒய். சந்திரசூட், அப்துல் நசீர் உள்ளிட்டோர் இருந்தனர். அந்தத் தீர்ப்பில், சர்ச்சைக்குரிய அந்த 2.7 ஏக்கர் நிலத்தில் குழந்தை ராமர் கோயில் கட்டிக்கொள்ளவும், இஸ்லாமியர்கள் வழிபாடு செய்ய அயோத்தியில் 1000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கவும் உத்தரவிட்டது.
இந்த அமர்வில் இருந்து நீபதிகள் எல்லாம் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது அந்த அமர்வில் இருந்து நீதிபதி சந்திரசூட் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ளார். இவர், கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாத வழக்குகள் அடிக்கடி வரும். அதுபோல் தான் அயோத்தி ராமர் கோயில் வழக்கிலும் நடந்தது. மூன்று மாதங்களாக என் முன்னே இந்த வழக்கு இருந்தது.
இதையும் படியுங்கள் :
“கடைசி தமிழன் இருக்கும் வரை திராவிடத்தை தொட்டு கூட பார்க்க முடியாது” – உதயநிதி ஸ்டாலின்
நான் தெய்வத்தின் முன் அமர்ந்து அவரிடம் ஒரு தீர்வு காண வேண்டும் என்று சொன்னேன்” என்று பேசியுள்ளார். தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் வழக்கமாக கடவுளை வணங்குவேன் என்றும், என்னை நம்புங்கள் உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால், கடவுள் எப்போதும் வழி காட்டுவார் என்றும் பேசியுள்ளார்.
.