ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு கனடா இந்தியா ஃபவுண்டேஷன் அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்து உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவோருக்கு CIF குளோபல் இந்தியன் என்ற விருது வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலில் மாற்றம் குறித்து விழுப்புணர்வை ஏற்படுத்தியதற்காக 2024ஆம் ஆண்டுக்கான விருது ஜக்கிவாசுதேவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜக்கிவாசுதேவ் போதித்து வரும் யோகா, தியானம் உள்ளிட்டவை கனடாவின் பொதுநலத்துடன் ஒன்றுவதாக சிஐஎப் அமைப்பு கூறியுள்ளது. டொரண்டோவில்விருதை பெற்றுக்கொண்ட ஜக்கிவாசுதேவ், இந்த விருதில் கிடைக்கும் சுமார் 30 லட்ச ரூபாயை காவிரி காலிங்க் அமைப்புக்கு அளிப்பதாக தெரிவித்தார்.
11 கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் இதுவரை நடப்பட்டுள்ளதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
மண்ணை காப்போம் என்ற முன்னெடுப்பை இதுவரை 400 கோடி பேரிடம் ஈஷா அறக்கட்டளை சேர்த்துள்ளது
இதுகுறித்து கனடா இந்தியா அறக்கட்டளையின் தலைவரான ரித்தேஷ் மாலிக் கூறியதாவது-
இந்த விருதை சத்குரு ஏற்றுக் கொண்டதை எங்களது அதிர்ஷ்டமாக கருதுகிறோம். உலக அளவில் மனிதத்துவம் மற்றும் எதிர்கால நலன்களுக்கு சத்குரு ஏராளமான பணிகளை செய்து வருகிறார். அவர் மூலமாக தற்காலத்தில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள், அதற்கான தீர்வுகளை அறிந்துகொள்கிறோம்.
ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் உள்ள தீர்வுகளை இந்திய ஆன்மிகத்தின் அடிப்படையில் மிகத் தெளிவாக சத்குரு எடுத்துரைத்து வருகிறார். ஒவ்வொரு தனிநபரின் முன்னேற்றத்திற்காக நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளை சத்குரு அளிக்கிறார். மண் அரிப்பு, பருவ நிலைமாற்றம் முதல் உணவு தரம் வரை அவர் பெற்றிருக்கும் ஞானம் வியக்கத்தக்கது.
இதையும் படிங்க – வயநாடு தேர்தலில் பிரியங்கா காந்திக்கு எதிராக போட்டி?… குஷ்பு சொல்வது என்ன?
சத்குரு மூலமாக கனடாவும் ஏராளமான பலன்களைபெறும். யோகா, தியானம், மனப் பயிற்சி உள்ளிட்ட அவர் வழங்கும் சேவைகள் கனடா மக்களின் ஆரோக்கியத்தை உயர்த்தும். குறிப்பாக மனதளவில் இன்னும் கனடா மக்கள் மேன்மை அடைவார்கள் என்று தெரிவித்தார்.
இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் CIF எனப்படும் கனடா இந்தியா அறக்கட்டளை அமைப்பு செயல்பட்டு வருகிறது.
.