மகாராஷ்டிராவில் இரு முனை தேர்தல் களமாக உள்ளது. ஒன்று மஹாயுதி, மற்றொன்று மகாவிகாஸ் அகாடி. மஹாயுதி கூட்டணியில் பாஜக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகள் உள்ளன. மகாவிகாஸ் அகாடியில், காங்கிரஸ், சர்த்பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் உள்ளன.
இதில் மஹாயுதி கூட்டணியில் இன்னும் பேச்சுவார்த்தை முடிவுறவில்லை. ஆனால், பாஜக, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தரப்பில் வேட்பாளர்களை அறிவிக்கும் பணிகளை துவங்கிவிட்டன. இருந்தபோதிலும் ஷிண்டே சிவச்சேனா, இன்னும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
அதன்படி பாஜக 99 தொகுதிகளுக்கும், அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் 38 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
மறுபுறம், மகாவிகாஸ் அகாடியில் உள்ள காங்கிரஸ், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுமே தலா 85 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இந்திய அளவில் இந்தியா கூட்டணியாகவும் மகாராஷ்டிராவில் மகாவிகாஸ் அகாடியாகவும் இருக்கும் இந்தக் கூட்டணியில் தற்போது மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சரான பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டார். காங்கிரஸில் இருந்த இவர் சில காலத்திற்கு முன்னர் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸில் இணைந்தார். இவரது மகன் ஜீஸ்கான் சித்திக், மகாராஷ்டிரா காங்கிரஸின் தலைவராகவும், பாந்திரா தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்துவருகிறார்.
இதையும் படியுங்கள் :
Exclusive: தவெக முன்வைக்கும் கொள்கை என்ன? – விளக்கிய பத்திரிகையாளர் அய்யநாதன்
இந்த நிலையில், இன்று அவர் திடீரென காங்கிரஸில் இருந்து விலகி அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இணைந்துள்ளார். மேலும், காங்கிரஸில் இருந்து அவர் விலகியதற்கு பல அதிர்ச்சிகரமான தகவலையும் சொல்லியுள்ளார்.
முன்னதாக நேற்று ஜீஸ்கான் சித்திக் தனது எக்ஸ் பக்கத்தில், “பழைய நண்பர்கள் பாந்திரா கிழக்கு தொகுதியில் தங்களது வேட்பாளரை அறிவித்திருப்பதாக தெரிகிறது. உங்களை மதிப்பவர்களிடமும், கௌரவிப்பர்களுடனும் நட்பு பாராட்டுங்கள். அதாவது கூட்டத்தை அதிகரிப்பதில் அர்த்தமில்லை. தற்போது மக்கள் தங்கள் முடிவை அறிவிப்பார்கள்” என பதிவிட்டிருந்தார்.
सुना है पुराने दोस्तों ने वांद्रे पुर्व में अपना उम्मीदवार घोषित कर दिया है । साथ निभाना तो कभी इनकी फितरत में था ही नहीं।
“रिश्ता उसी से रखो जो इज़्ज़त और सम्मान दे,
मतलब की भीड़ बढ़ाने का कोई फ़ायदा नहीं।”अब फैसला जनता लेगी!!!!
— Zeeshan Siddique (@zeeshanBabaS) October 23, 2024
இதனைத் தொடர்ந்தே இன்று அஜித் பவார் தேசியவாத காங்கிரஸில் இணைந்துள்ளார். இணைந்தபிறகு அவர் தெரிவித்திருப்பதாவது; மகாவிகாஸ் அகாடியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ இருக்கும் தொகுதி, உத்தவ் சிவசேனாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்களும், மகாவிகாஸ் அகாடி தலைவர்களும் கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் ஏமாற்றத்தை தந்துள்ளனர்.
இக்கட்டான நேரத்தில் அஜித்பவார், பருஃபுல் பட்டேல் உட்பட தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் என் மீது நம்பிக்கை வைத்தனர். நான் அவர்களுக்கு நன்றிகடன் பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
.