செயற்கை நுண்ணறிவின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறும் என்று ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஜியோ கலாசார மையத்தில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹூவாங் உடன், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி கலந்துரையாடினார்.
அப்போது, இந்தியில் வித்யா என்றால், அறிவு என்று பொருள் என முகேஷ் அம்பானி கூறியதற்கு, அதை அறிந்தே அப்பெயரை சூட்டினேன் ஜென்சன் பதிலளித்தார். நுண்ணறிவின் நுழைவு வாயிலாக இந்தியா திகழ்கிறது என்று கூறிய முகேஷ் அம்பானி, அறிவுசார் தன்மையே, உலகை வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க:
மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்..? பரபரக்கும் அரசியல் களம்
தற்போதைய இந்தியாவை புதிய இந்தியா என பிரதமர் கூறியதாக சுட்டிக்காட்டிய முகேஷ் அம்பானி, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பொருளாதாரமே ஒரு நாட்டை வழிநடத்துகிறது என்றார். உலகிலேயே இந்தியாவில்தான் குறைந்த விலைக்கு இணைய சேவை கிடைப்பதாக முகேஷ் அம்பானி கூறினார்.
இணைய சேவையில் அனுபவமே இல்லாமல், இந்தியாவை ஜியோ நிறுவனம் முதலிடத்திற்கு கொண்டு சென்றதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹூவாங், ஜியோ உடன் இணைந்து இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பு தொடங்கப்படும் என்று கூறினார்.
.