திருப்பதி கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதிகளை வாடகைக்கு விடுவதாக சொல்லி ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் தரப்பில் விஐபி தரிசனம், சிறப்பு தரிசனம் உள்ளிட்டவைகள் ஆன்லைனில் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிடப்படுகிறது.
பக்தர்கள் தங்குவதற்கு விடுதி அறைகளுக்கான முன்பதிவையும் தேவஸ்தானமே செய்து வருகிறது. தரிசன டிக்கெட் மற்றும் விடுதி அறைகள் முன்பதிவுக்கு எப்போதும் லட்சக்கணக்கானவர்கள் காத்திருப்பதால் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. பக்தர்களின் தேவைகளை புரிந்து கொண்ட ஏராளமான சீட்டிங் கும்பல்கள், திருப்பதி தேவஸ்தான விடுதிகள் முன்பதிவு செய்வதிலும் கைவரிசை காட்டி வருகிறது.
மேலும் திருப்பதி மற்றும் திருமலையில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக ஏராளமான தங்கும் விடுதிகள், கெஸ்ட்ஹவுஸ்கள் உள்ளன. திருப்பதி தேவஸ்தானம் மூலம் மட்டுமே இந்த அறைகளை முன்பதிவு செய்ய முடியும். ஆனால் ஏராளமான மோசடி கும்பல்கள் இந்த அறைகளை முன்பதிவு செய்து கொடுப்பதாக கூறி, பக்தர்களிடம் பண மோசடி செய்து வருகின்றன.
இதையும் படிங்க : மகாராஷ்டிரா தேர்தலில் விசிக 10 தொகுதிகளில் போட்டி! அதிரடி முடிவு எடுத்த திருமாவளவன்
இந்தியில் பேசும் இந்த கும்பல், ஏசி, நான் ஏசி, டபுள் பெட்ரூம், ட்ரிபிள் பெட்ரூம் என்று வசதிகளுக்கு ஏற்றவாறு அறைகளை பிரித்து வாடகைக்கு கொடுப்பதாக இணையதளங்களில் விளம்பரப்படுத்தி உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மூன்று வேலையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்றும் அந்த மோசடி கும்பலை தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒருவருடைய ஆதார் ஆட்டையையும், பணத்தையும் செலுத்தினால் உடனடியாக திருப்பதி தேவஸ்தான விடுதி அறைகள் முன்பதிவு செய்யப்படும் என்றும் அந்த கும்பல் தெரிவித்துள்ளது. இந்தியில் பேசும் மோசடி கும்பலின் ஆடியோ தற்போது வேகமாக பரவி பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து தேவஸ்தானம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
.