நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரை! தென் மாநிலங்கள் தண்டிக்கப்படும்

By
On:
Follow Us

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரை செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் தண்டிக்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் முன்னிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், நாடாளுமன்றத்தில் இந்த மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையும் என்று கடந்த சில காலமாக அச்சம் எழுந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

விளம்பரம்

இதன் காரணமாகவே 2026 ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி எண்ணிக்கையை மாற்றம் செய்யும் வகையில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:
திருமாவளவன் முதல்வராக முடியுமா? வார்த்தை போரில் எல்.முருகன் – சீமான்..

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அட்டவணை முழுவதும் சீர்குலைந்துள்ளதாகக் கூறியுள்ள அவர், 2021 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

இது மக்களவைத் தொகுதிகளை மாற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்படுமா என்று கேள்வியெழுப்பியுள்ள அவர், வெற்றிகரமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்றும் இதற்காக தகுந்த வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

விளம்பரம்

.



நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements