நெல்லையில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை! – News18 தமிழ்

By
On:
Follow Us

நெல்லை
யில் குண்டும் குழியுமான சாலையை கடந்து அரசு மருத்துவமனைக்கு செல்வதற்குள் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வழி அதிகரித்து,  ஆம்புலன்சில் வைத்தே பிரசவம் நடந்துள்ளது. இதில், தாயும் சேயும் நலமானதை தொடர்ந்து, அவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள், புதிய குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக  பாதாள சாக்கடை  மற்றும் குடிநீர் குழாய் பதிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடப்படப்படாமல் உள்ளது. பணிகள் முழுமையாக முடிவடைந்தால் மட்டுமே சாலைகள் அமைக்கப்படும் என்ற சூழலில் 2 ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலைகளிலேயே பொது மக்கள் பயணித்து வருகின்றனர்.

விளம்பரம்

இதனிடையே  தோண்டிய பள்ளங்களை சரியாக மூடாமல் விட்டுள்ளதால் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்த சாலையில் கர்ப்பிணிகள் வாகனத்தில் சென்றால் சுக பிரசவம் தான் நடக்கும் என கிண்டலாகச்  வேதனையுடன்  சொல்வார்கள். ஆனால், அப்படி ஒரு சம்பவம் நிஜத்திலே இன்று நடந்துள்ளது.

திருநெல்வேலி – டவுண்  சந்திப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள  பதியை சேர்ந்தவர் ராஜா (37). நெல்லையில் தனியார் நிறுவனம் ஒன்றில்  ஊழியராக பணியாற்றி வருகிறார்.  அவரது மனைவி மாரி (33). நிறைமாத கர்ப்பிணியான இவருக்குபிரசவ தேதி நெருங்கி இருந்தாலும் ஓரிரு நாளில் மருத்துவமனையில் சேர்க்கலாம் என திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.

விளம்பரம்

வடகறிக்கு உப்பு அதிகமானதால் சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மேலாளர் கைது

இந்த நிலையில்  மாரிக்கு திடீரென பிரசவ  வலி ஏற்பட்டுள்ளது.  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனது மனைவியை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்க முடிவு செய்தார் ராஜா.

அதன்படி, அவர் தனது மனைவியை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்சை அழைத்தார். டிரைவர் சந்திரசேகர், உதவியாளர் சுந்தர்ராஜன் குழுவினர் டவுண் சந்தி பிள்ளையார் கோவில் அருகே ராஜா குடியிருக்கும் தெருவுக்குள் சென்று நிறைமாத கர்ப்பிணி  மாரி,  அவரது தாயார் மற்றும் கணவர் ராஜா ஆகியோரை அழைத்துக் கொண்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நோக்கி புறப்பட்டனர்.

விளம்பரம்

10 கிலோமீட்டர் தூரத்தில் மருத்துவமனை உள்ள நிலையில் சந்திப்பு வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளே இல்லாத நிலை காணப்படுகிறது. புழுதி பறக்கும் இந்த குண்டும், குழியுமான சாலைகளில் தினமும் 10க்கும் மேற்பட்டவர்கள் சிறு சிறு விபத்துகளில் சிக்குவதும் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது.

இந்த நிலையில் வீட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் குண்டு குழியுமான சாலையில் வந்ததால்  கர்ப்பிணி மாரிக்கு  வயிற்றுவலிய அதிகமாகி  அவர்  பிரசவ வலியால் துடித்தார்.  அவருக்கு  பனிக்குடம் உடைந்து நீர் வெளியேற தொடங்கியது. தொடர்ந்து, குழந்தையின் தலை வெளியே வர துவங்கிவிட்டது. இதனை அறிந்து விரைந்து செயல்பட்ட  ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் உதவியாளர், திருநெல்வேலி ஜங்ஷன் ஸ்ரீபுரம் பகுதி அருகே வந்த போது,  திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு குண்டு, குழியுமான சாலையில் போக்குவரத்து நெரிசலில் கொண்டு செல்வது அத்தனை பாதுகாப்பான விஷயம் இல்லை என்பதை அறிந்து  ஆம்புலன்சை ரோட்டு ஓரமாக நிறுத்தினர்.

விளம்பரம்

டிரைவர் சந்திரசேகர். உதவியாளர் சுந்தர்ராஜன், மாரியின் தாயார் உதவியுடன் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர். மாரிக்கு  அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது தாயை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மற்றும்  பச்சிளம் குழந்தையை சுத்தம் செய்து, பாதுகாக்கும் நடவடிக்கைகளை இருவரும்  மேற்கொண்டனர்.

தாயும் சேயும் நலமாக இருப்பதை உறுதி செய்த பின்னர் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பிரசவ வார்டில அனுமதித்தனர். 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே சுகப் பிரசவம் நடந்ததோடு தாயும் சேயும் நலமாக இருப்பதை அறிந்து டாக்டர்கள், நர்ஸ்களும்  தகுந்த சமயத்தில் புத்திசாலி தனமாக செயல்பட்டு இரு உயிர்களை காப்பாற்றிய டிரைவர் மற்றும் உதவியாளரை வெகுவாக பாராட்டினர்.

விளம்பரம்

செய்தியாளர்  – சிவமணி

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements