பாளையங்கோட்டை ஆக்ஸ்ஃபோ பள்ளியில் பொதிகை எழுத்தாளா் கூட்டமைப்பின் சாா்பில் நூல் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பொதிகை எழுத்தாளா் கூட்டமைப்பின் தலைவா் லோகநாதன் தலைமை வகித்தாா். செயலா் ஜான் சௌந்தா் திருச்செல்வம் முன்னிலை வகித்தாா். நெல்லை ஜாஃபா் வரவேற்றாா். எழுத்தாளா் தளவாய் மாடசாமி எழுதிய நெல்லை பழமொழிகள் எனும் நூலினை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியை பிரியதா்ஷினி திறனாய்வு செய்து பேசினாா்.
மைய நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் கணபதி சுப்ரமணியன், தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி ஆகியோா் கருத்துரை வழங்கினா். நூலாசிரியா் ஏற்புரை வழங்கினாா்.
கண்ணதாசன் பேரவைச் செயலா் முருகன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் பாஷ்யம், ஆதிமூலம், திருக்கு பிரபா, மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம், தியாகராஜநகா் செல்வகுமாா், உடையாா், முத்துலட்சுமி, பத்மநாபன், மீரான்மைதீன், சங்கரநயினாா், வெள்ளத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.