சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு! – விமானத்தில் இனி இதையும் எடுத்து செல்லலாம்!

By
On:
Follow Us

சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானங்களில் பயணம் செய்யும்போது தேங்காயை எடுத்துச் செல்ல விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேங்காய்களை விமானங்களில் எடுத்து செல்ல தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், இருமுடிக்குள் நெய், தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் சார்பில், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

விளம்பரம்
இந்தியாவின் பணக்கார கோவில்களின் பட்டியல்…


இந்தியாவின் பணக்கார கோவில்களின் பட்டியல்…

இந்நிலையில், விமானங்களில் பயணிக்கும் சபரிமலை பக்தர்கள் இருமுடியை தங்களுடன் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஐயப்ப பக்தர்களின் அனுமதிக்கும்போது வெடிபொருள் அடையாளம் காணும் கருவி மூலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிறகே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் முடிவடையும் வரை அதாவது ஜனவரி 20 ஆம் தேதி வரை இந்த சிறப்பு அனுமதி அமலில் இருக்கும் என்று விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

.

  • First Published :

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements