அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமான கட்டடங்கள் மட்டும் குறிவைத்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் இடிக்கப்படுகின்றன. அதே பகுதியில் அமைந்துள்ள ஹிந்து கோயில்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இடிக்கப்பட்டு அரசு சாா்பில் கையகப்படுத்தப்படும் நிலங்கள், மூன்றாம் நபா்களுக்கு ஒதுக்கப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன. எனவே, அரசு நடவடிக்கையில் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா்.
மசூதி இடிப்பில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

For Feedback - sudalaikani@tamildiginews,com.