மழையால் வீடு இடிந்து தந்தை, மகள் உயிரிழப்பு – News18 தமிழ்

By
On:
Follow Us

தென்காசி
மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே
மழை
யால் வீடு இடிந்து விழுந்ததில் தந்தை ,மகள் உயிரிழந்தனர்.  தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள வாகைக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் கல்யாண சுந்தரம் (60) விவசாயி.  தனது மனைவி வேலம்மாள் (55) மற்றும் இளைய மகள் ரேவதி (26) ஆகியோருடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

விளம்பரம்

நேற்று மாலையிலிருந்து இந்தப் பகுதியில் மழை பெய்து வந்த நிலையில் நள்ளிரவில் 1 மணியளவில் கல்யாண சுந்தரத்தின் வீடு இடிந்து விழுந்துள்ளது. வீடு விழுந்த சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:
கடத்தல் மண் விளம்பர பலகை சர்ச்சை: போலீஸ் அறிவுறுத்தல்

மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தென்காசி மற்றும் ஆலங்குளத்தில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் ஆழ்வார்குறிச்சி போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் இடிபாட்டில் சிக்கி தூங்கிக் கொண்டிருந்த கல்யாண சுந்தரம்,  மற்றும் மகள் ரேவதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News18

இவர்களை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்த வேலம்மாள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுக்கு இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழையால் வீடு இடிந்து விழுந்து தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் கிராமப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

செய்தியாளர்: செந்தில் – தென்காசி

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements