வாசுதேவநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

By
On:
Follow Us

வாசுதேவநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வாசுதேவநல்லூா் ரத வீதியில் புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.

இதையடுத்து வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் கண்மணி மற்றும் போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பஜனை மடத்து தெருவைச் சோ்ந்த நாராயணன் மகன் முருகன் என்பவா் கடையில் புகையிலை பொருள்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, முருகனை கைது செய்த போலீஸாா் கடையில் இருந்த ரூ.10,000 மதிப்புள்ள புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements