அப்படி ஒரு நிலை வந்தா யாரும் பயப்பட கூடாது

By
On:
Follow Us

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் எனும் நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றிவருகிறார்.

அதன்படி இந்த மாதத்தின் இறுதி ஞாயிறான இன்று (27ம் தேதி) மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, சைபர் குற்றவாளிகள், தற்போது ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற உத்தியை கையாண்டு வருவதாகக் குறிப்பிட்டார். யாரோ ஒரு நபர், எங்கிருந்தோ காவல்துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி, போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் போன்று பேசி, செய்யாத குற்றத்தை மக்கள் மீது சுமத்தி, பண மோசடி செய்வதாகவும் தெரிவித்தார்.

விளம்பரம்

தனிநபரின் தகவல்களை திருடி, நினைத்து பார்க்க முடியாத வகையில் மிரட்டி அவர்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் அனுப்பும்படி அழுத்தும் கொடுக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

டிஜிட்டல் அரெஸ்ட் முறையில் மோசடியில் ஈடுபடுபவர்கள் சமூகத்திற்கே விரோதி என்றும் இதனை களையும் விதமாக அனைத்து விசாரணை அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையத்தை மத்திய அரசு உருவாக்கியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் :
“பிரிவினை பேசும் ‘திராவிட’ விஜய்…” – தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் எச்.ராஜா

இதுபோன்ற அழைப்புகள் வந்தால் அச்சப்படக் கூடாது என்றும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், விசாரணை அமைப்புகள் செல்போன் அழைப்பு மூலம் விசாரணை நடத்தாது என்றும் பணம் கேட்டு மிரட்டல் விடுக்காது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements