13 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் பாலியல் துன்புறுத்தல் – புதுமாப்பிள்ளை உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு

By
On:
Follow Us

13 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதால்  மாப்பிள்ளை  உட்பட 9 பேர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த நடுவக்குறிச்சி சேர்ந்தவர் சுப்பையா இவரது மனைவி கல்லத்தி இவர்கள் இருவரும் நெல்லை பேட்டையில் உள்ள கோழிப் பண்ணையில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களது  13வயது மகள் இவர் நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பாதுகாப்பு கருதி அருகில் உள்ள தனது மாமன் மாடசாமி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக தெரிகிறது. அப்போது மாடசாமியின் மகன் வடிவேலு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறியதோடு உன்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் எனது முறைப்பெண் நீ என அடிக்கடி கூறி வந்ததாக தெரிகிறது.

விளம்பரம்

சிறுமிக்கு 13 வயதே ஆன நிலையில் இதுகுறித்து அவர் தனது மாமா பாட்டி உள்ளிட்டோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் உனக்கு அவன் முறை மாப்பிள்ளை தானே இதுகுறித்து ஏதும் கவலைப்பட வேண்டாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி தனது மாமா மாடசாமி வீட்டில் சிறுமி இருந்தபோது அங்கு யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்ட வடிவேலு சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

உன்னை கட்டாயம் திருமணம் செய்து கொள்வேன் என்று வடிவேலு தெரிவித்து சென்ற நிலையில் மறுநாள் சிறுமியின் மாமா மாடசாமி மற்றும் உறவினர்கள் சேர்ந்து சிறுமியை தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று வடிவேலுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது.

விளம்பரம்

சிறுமியின் பெற்றோருக்கு இதுகுறித்த தகவல் ஏதும் சொல்லப்படவில்லை. திருமணம் முடிந்த கையோடு நடுவக்குறிச்சிக்கு வடிவேலு  சிறுமியை அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து வடிவேலு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கவே கடுமையான வயிற்று வலியால் சிறுமி அவதிப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வடிவேலுக்கு  தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடுவக்குறிச்சிக்கு  வந்த சிறுமியின் பெற்றோர் மகள் சுருண்டு வீட்டில் படுத்து கிடப்பதை பார்த்து விசாரித்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடுமைகளை தாய் தந்தையிடம் தெரிவித்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடுமைகளை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணனுக்கு  கடிதம் மூலம் சிறுமி தெரிவித்தார்.

விளம்பரம்

Also read… 
ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதிமன்றத்தில் போலீஸார் வைத்த கோரிக்கை

கண்காணிப்பாளர் உத்தரவுப்படி  உடனடியாக விசாரணையில் இறங்கிய அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பிரியதர்ஷினியை மீட்டு பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தப்பட்டு உள்ளாரா என்பதை அறிய அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். மேலும் பதிமூன்று வயது சிறுமியை திருமணம் செய்ததற்காக வடிவேலு அவரது தந்தை மாடசாமி மற்றும் உறவினர்கள் என மொத்தம் 9 பேர் மீது குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

பாதிக்கப்பட்ட சிறுமி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணனிடம் அளித்த மனுவின் அடிப்படையிலும் அதனைத் தொடர்ந்து மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements