2024ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ரேபரலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் வயநாடு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்தது.
அதன்படி வரும் நவம்பர் 13ம் தேதி வயநாடு தொகுதிக்கு இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோக்கேரியும், பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர்.
தற்போது வயநாடு தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று, பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வயநாடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான எதிர்காலம் இல்லை.
நீங்கள் கால்பந்தை விரும்புகிறீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால், விளையாடுவதற்கு போதுமான வசதிகள் உங்களுக்கு இல்லை. அவை மேம்படுத்தப்பட வேண்டும்.
இதையும் படியுங்கள் :
Exclusive: “தவெக ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஒரு நல்ல வாய்ப்பு” – விசிக வன்னி அரசு வரவேற்பு!
மாநிலத்திற்கும் நாட்டுக்காகவும் விளையாடுவதற்காக கடினமாக உழைக்கும் சிறுவர்கள் அனைவருக்கும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்” என பேசினார்.
.