சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றம் … திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

By
On:
Follow Us

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள உலகப் பிரசித்தி பெற்றதும் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் 2  ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா  கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சங்கரன்கோவில் அருள்மிகு. சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா  ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரபீடத்தில் பால், பன்னீர், விபூதி, சந்தனம், உள்ளிட்ட 16 வகை முலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார ஆராதனைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

விளம்பரம்

News18

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் சுவாமி, அம்பாள் ரதவீதி சுற்றி வந்தனர். அப்போது அங்கு ஏராளமான பக்தர்கள் நின்று சுவாமி , அம்பாளை தரிசித்தனர். இவ்விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையதுறை அதிகாரிகள் செய்து இருந்தனர்.

செய்தியாளர் : ச.செந்தில்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements