தென்காசி
அருகே புகார் மனுவின்மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி இளம்பெண், செல்போன் டவர் மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கொட்டுர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி மகள் மதி. தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறிய முத்துராஜ் என்பவரிடம் 4 லட்ச ரூபாய் அளித்ததாகவும், ஆனால் அவர் தன்னை ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் இளம்பெண் சேர்ந்தமரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் அதன் பின்னர் மேல் விசாரணைக்காக தென்காசி மாவட்ட காவல் குற்றபிரிவுக்கு புகார் அனுப்பி வைத்தாகவும் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இளம்பெண் வேதனை அடைந்து கழுகுமலை செல்லும் சாலையில் தனியார் சொந்தமான செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வரும் முன்னர் அந்த பகுதியில் மழை பெய்ததால் இளம்பெண்ணிடம் அருகில் இருந்த பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
Also read…
போலீஸை விமர்சித்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்
அதனைத் தொடர்ந்து இளம் பெண் கீழே இறங்கினார். காவல்துறையினரிடம் கொடுத்த மனுவுக்கு உரிய விசாரணை கிடைக்காததால் செல்போனில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-செய்தியாளர்: செந்தில்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…