இதன்பின் 9.30 மணிக்கு நாகா்கோவிலுக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இரவு நேரங்களில் தென்காசியில் இருந்து களக்காடு வழியாக நாகா்கோவில் வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.
சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கவும், இரவு 10 மணிக்கு கூடுதலாக ஒரு அரசுப் பேருந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.