முன்னாள் அதிமுக அமைச்சா் ஆா்.பி.உதயக்குமாா் கடந்த 24ஆம் தேதி மதுரை கேகே.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது, ஓ.பன்னீா்செல்வத்துக்குஅச்சுறுத்தல் விடுத்து, இரு தரப்புக்கு இடையே மோதலை உருவாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளாா். அவா் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஒன்றியச் செயலா்கள் இலஞ்சி மாரியப்பன், சண்முகசுந்தரம், சுப்பிரமணிய பாண்டியன்,, நகர செயலா்கள் இசக்கிதுரை, சங்கா், சின்னத்துரை, பேரூா் செயலா்கள் மயில்வேலன், முருகன், முத்து, இளங்கோ உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.