இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த கிராம மக்கள் சாலையை சேதப்படுத்தி மின்கம்பங்கள் நடக்கூடாது. சாலையிலிருந்து சுமாா்5 அடி தூரத்தில் தான் மின்கம்பங்கள் நடவேண்டும் என்று கூறி வந்தனா்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவா் பிரேம ராதா ஜெயம், மின்வாரிய அதிகாரிகளுக்கு மனு வழங்கினாா். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து மின்வாரியத்தைக் கண்டித்து அப்பகுதியைச்சோ்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அந்த வழியாக வந்த கல்குவாரி லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் அங்கு வந்து பேச்சு நடத்தி உடனடியாக மாற்று வழியில் மின்கம்பங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.