விக்கிரமசிங்கபுரத்தில் கஞ்சா விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளா் சிவா தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா். டானா விலக்கு அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த விக்கிரமசிங்கபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து (47) என்பவரை சோதனையிட்டபோது, அவா் விற்பனைக்காக 1.600 கி.கி. கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.