250 கி.மீ வேகம்.. இந்தியாவின் அதிவேக புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்கும்?

By
On:
Follow Us

வரவிருக்கும் புல்லட் ரயில், இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், வேகம் மற்றும் செயல்திறனுக்கான புதிய நிலைகளை உருவாக்குவதற்கும் ஒரு புதிய வரவாக இருக்கும் என்பது இந்தியன் ரயில்வேயின் நோக்கமாக உள்ளது.

மிகவும் பரந்த ரயில்வே நெட்வொர்க்கிற்கு பெயர் போன இந்தியன் ரயில்வே, உள்நாட்டிலேயே புல்லட் ரயிலை அறிமுகப்படுத்துவதன் மூலம் ரயில் கட்டுமாணத்தில் அடுத்த கட்டத்தை எட்ட இருக்கிறது. ஜப்பானின் ஷின்காசன் ஈ5 ஆல் ஈர்க்கப்பட்ட இந்த புதிய அதிவேக ரயில் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் அது இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

இந்த திட்டம் இந்தியன் ரயில்வேயின் அந்தஸ்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புல்லட் ரயில் சம்பந்தப்பட்ட அனைத்து உற்பத்திகளும், இந்தியாவிற்குள்ளேயே மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட இருக்கும் புல்லட் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் மும்பை – அகமதாபாத்துக்கு இடையே நடைபெறும்.

மூத்த ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த புல்லட் ரயிலுக்கான ப்ளூபிரின்ட் ஏறக்குறைய முடிந்துவிட்டது. மேலும் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கட்டுமானம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும் பட்சத்தில், வருகிற 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படும். இருப்பினும், காலவரிசை குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க : மக்களை குறிவைக்கும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி – அலர்ட் செய்த பிரதமர் மோடி

இந்த புதிய முயற்சி இந்தியன் ரயில்வேயின் பாரம்பரியத்தில் ஈர்க்கக்கூடிய ஒரு திட்டமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 115,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பாதையுடன், இந்திய இரயில்வே ஆசியாவிலேயே மிகப்பெரிய இரயில் நெட்வொர்க்கையும் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய இரயில்வே நெட்வொர்க் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

இந்தியாவில் 1853 ஆம் ஆண்டு முதன்முதலாக, மும்பையிலிருந்து தானே வரை 400 பயணிகளுடன் இயக்கப்பட்ட பயணிகள் ரயில் 33 கிலோமீட்டர் தூரம் ஓடியதில் இருந்து இந்தியன் ரயில்வே அதன் பயணத்தை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஹவுரா-அமிர்தசரஸ் மெயில் இந்தியாவின் மெதுவான ரயில் என்று அறியப்பட்டாலும், தற்போதைய வேகமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மணிக்கு 130 கிமீ வேகத்தில் செல்கிறது.

விளம்பரம்
ஏசி விடிய விடிய ஓடினாலும் EB பில் குறையணுமா.? இதோ டிப்ஸ்..


ஏசி விடிய விடிய ஓடினாலும் EB பில் குறையணுமா.? இதோ டிப்ஸ்..

வரவிருக்கும் புல்லட் ரயில், இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், வேகம் மற்றும் செயல்திறனுக்கான புதிய நிலைகளை உருவாக்குவதற்கும் ஒரு புதிய வரவாக இருக்கும் என்பது இந்தியன் ரயில்வேயின் நோக்கமாக உள்ளது.

கூடுதலாக, நாட்டின் முதல் புல்லட் ரயில் பெங்களூருவில் தயாரிக்கப்பட உள்ளதாகவும், கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதியன்று இரண்டு ஃசேர்-கார் கொண்ட அதிவேக ரயில்களை தயாரிப்பதற்கான டெண்டர்களுக்கு ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தொழிற்சாலை (ICF) அழைப்பு விடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எட்டு பெட்டிகள் கொண்ட இரண்டு ரயில்களை உருவாக்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ரயிலில் நிலையான 3+2 இருக்கை அமைப்புடன் ஏழு பெட்டிகளும், 2+2 இருக்கைகள் கொண்ட ஒரு எக்ஸிகியூட்டிவ் போகியும் இருக்கும். இதில் மொத்தமாக சுமார் 174 இருக்கைகள் இருக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. பயணிகளின் தேவையைப் பொறுத்து, எதிர்காலத்தில் இந்த ரயிலில் 12 அல்லது 16 பெட்டிகள் சேர்க்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements