கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், எஸ்கார்ட் வாகனங்களின் பாதுகாப்புடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படாமல், வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தன.
இதில், இரு புறங்களிலும் வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன. அப்போது அந்த சாலையில் இடது புறத்தில் இருந்து வலுது புறமாக திரும்புவதற்கு ஒரு பெண் வண்டியின் இண்டிகேட்டரை போட்டு சட்டென திரும்பி உள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாரத முதல்வரின் எஸ்கார்ட் வாகன ஓட்டுநர், அந்தப் பெண்ணின் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக சட்டென பிரேக் பிடித்தார். அதனைத் தொடர்ந்து பின்னே வந்த மூன்று வாகனங்களும் சுதாரித்து சட்டென பிரேக் அடித்தன. இதில் மூன்றாவது வாகனத்தில் முதல்வர் பினராயி விஜயன் இருந்தார். இந்நிலையில், ஐந்தாவதாக வந்த எஸ்கார்ட் வாகனம் கேரள முதல்வர் வாகனத்தின் மீது மோதி நின்றது. அதனைத் தொடர்ந்து வந்த சில எஸ்கார்ட் கார்களும், ஆம்புலன்ஸும் அடுத்தடுத்து மோதி நின்றன.
#JUSTIN திடீரென சாலையை கடந்த பெண்ணால் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்#Kerala #RoadAccident #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/e2lTScCqv6
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 28, 2024
இந்த விபத்தில் முதல்வர் பினராய் விஜயனின் கார் சிறிதளவு சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக அவர் காயமின்றி தப்பினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.