வெயில் உக்கிரம் அடைந்துள்ளதால் மக்களை கவர்ந்த மண்பாண்ட பிரிட்ஜ் விற்பனை களை கட்டுகிறது. கேரளாவிற்கு மட்டும் விற்பனைக்கு அனுப்பப்பட்ட மண்பாண்ட பொருட்கள் தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் செல்கிறது.
தமிழகம் முழுவதிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. 100 டிகிரி அளவிற்கு வெயிலின் தாக்கம் இருக்கும் நிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர். ஓரளவு வசதி படைத்தவர்கள் பிரிட்ஜ், ஏசி போன்றவற்றை வாங்கினாலும் ஏழை எளிய மக்களால் அதனை வாங்க முடியாது.
மாறாக எவ்வளவு தான் மின்சாதன பொருட்கள் மூலமாக குளர்ச்சியை கொண்டு வந்தாலும் இயற்கை முறையில் கிடைக்கும் குளர்ச்சிக்கு தனி மவுசு தான். அந்த அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள காருகுறிச்சி மற்றும் அதன் அருகில் உள்ள கூனியூர் கிராமங்களில் மண் பாண்ட கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தண்ணீர் மண்பாண்டங்கள், தயிர் ஜாடி, மண்பாண்ட பிரிட்ஜ் தயார் செய்யப்படுகிறது.
இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. மண்பாண்ட பிரிட்ஜ் என்பது இரு மண்பாத்திரங்களை கொண்டதாக உள்ளது. ஒரு மண் பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீர் வைக்கப்படுகிறது. மற்றொன்றில் காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வைத்து பாதுகாக்கப்படுகிறது இதில் வைக்கப்படும் பொருட்கள் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாமல் இருப்பதாக கூறுகின்றனர்.
இங்க செய்யப்படும் பொருட்கள் கேரளாவிற்கு மட்டுமே கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தொழிலாளர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. தண்ணீர் பானைகள் மட்டுமல்லாது, தண்ணீர் பாட்டில், நல்லியுடன் கூடிய தண்ணீர் ஜா,டி தயிர் வைக்க தயிர்ஜாடி, மண் பிரிட்ஜ் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் கிருஷ்ணன் கூறுகையில் காருகுறிச்சி மண்பாண்ட பொருட்களுக்கு நாடு முழுவதிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
இது குறித்து மண் பாண்ட தொழிலாளார் கிருஷ்ணன் தெரிவிக்கையில், தயிர் ஜாடிகள் 50 ரூபாய் வரையிலும் தண்ணீர் ஜாடிகள் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மண் பிரிட்ஜ் 1000 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். ஆண்டுக்கு ஆண்டு விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் இதற்கு மூலப்பொருளான மண் கிடைப்பதில் பெரும் சிரமம் உள்ளது. மண் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. தொழில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மண் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். என்றார்.
25 ஆண்டுகளாக மண் பாண்ட தொழில் செய்து வரும் சிவகுமார் கூறுகையில் மண்பாண்ட பிரிட்ஜ் கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகிறனே். பொதுமக்கள் மத்தியில் இயற்கையான முறை இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதில் வைக்கப்படும் பொருட்கள் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். பொதுமக்கள் மீண்டும் இயற்கையை நோக்கி திரும்பி வருகின்றனர்.
அந்த காலங்களை போல மண்பாண்ட சமையல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார். பாரம்பரிய இயற்கை முறைகளுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக செய்யப்பட்டு வரும் மண்பாண்ட தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த தொழிலாளர்களுக்கு மண் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.
செய்தியாளர் : ஐயப்பன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…