நெல்லை அருகே தனியார் கல்குவாரியில் அதிகமாக வெடி வைத்து கற்களை உடைப்பதால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஓமலூர் பகுதியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் அதிகமான வெடிமருந்துகளை வைத்து கற்கள் உடைக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் விவசாய நிலங்களில் உள்ள கிணற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து வருவாய் அலுவலரிடம் கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராம மக்கள் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் கிராம மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் அனைவருமே நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக தெரிவித்தனர்.
ALSO READ |
ஓடும் காரின் மீதேறி இளைஞர்கள் குத்தாட்டம்… அபராதத்தை தீட்டிய டிராபிக் போலீஸ்
அப்போது பாதுகாப்பு நின்று கொண்டிருந்த போலீசார் 4 பேர் மட்டுமே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு 4 பேர் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது எங்கள் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது.
இந்த கல்குவாரியில் இரவு நேரங்களில் அதிகமான சத்தத்துடன் வெடிகளை வைத்து கற்களை உடைத்து வருகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் வாழ முடியாத சூழ்நிலை உள்ளது. எங்கள் வீடுகளில் சுவர் முழுவதும் விரிசல் ஏற்பட்டு வருகின்றன. அதேபோல நாங்க விவசாயம் செய்யும் கிணற்றிலும் தண்ணீர் இல்லாத சூழ்நிலையாக உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…