தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதை தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் மதிமுக மாவட்ட அலுவலகம் திறப்பு மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே கருத்துக் கேட்புக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கைபடிவம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி புத்தகம் ஆகியவற்றை வழங்கி கட்சி வளர்ச்சிக் குறித்து கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதை தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் வீட்டை வாடகைக்கு விட்டவர்களும், வாடகைக்கு இருந்தவர்களும் மிகவும் சிரமப்பட்ட நிலையில் சொத்துவரி உயர்வு என்பது கஷ்டமானது. இதை முதல்வர் மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம் என்றார்.
தற்போது பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து வாய்திறக்காத கட்சியினர், சொத்து வரி அறிவித்த 25 மணி நேரத்தில் போராட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். குறிஞ்சாகுளம் பிரச்சினை தொடர்பாக நாங்களும், விடுதலை சிறுத்தை தலைவரும் பேசி சுமூக முடிவு ஏற்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம். 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரச்சினை சில உயிரிழப்பு சம்பவம், பலர் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் வெளியே இருந்து வந்த சிலர் அரசியல் நோக்கில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். விரைவில் குறிஞ்சாகுளம் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது. கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பிரச்சினை போல் இல்லாமல் தற்போது குற்றங்கள் நடந்த உடனே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
செய்தியாளர் : ச.செந்தில் ( தென்காசி )
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…