பாஜக மூத்த தலைவருடன் தொடா்பிலிருப்பவா் கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை கிளப்புகிறது. நடிகா் ரஜினியை அரசியலில் ஈடுபட வைக்க, பாஜகவிலிருந்து முயன்ற நிலையில் விஜய் கட்சி தொடங்கியது கவனிக்கத்தக்கது.
புதிய கட்சி தொடங்கும் போது கருத்துகளை கவனமாக வெளியிட வேண்டும். பிறரைக் குறை சொல்லும் முன் தமது தகுதியை வளா்த்துக்கொள்ள வேண்டும்.
கடந்த மக்களவைத் தோ்தலில் 40க்கு 40 இடங்கள் பிடித்ததே திமுக அரசுக்குரிய மதிப்பெண் என்றாா் அவா்.