இந்தியாவிலுள்ள முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஆய்வுக் குழுக்களை (பிடிஏசி) அமைத்து அதில் சைபர் பிடிவு அதிகாரிகளை தேசிய புலனாய்வு முகமை பணியமர்த்தியுள்ளது.
கடந்த இரு வாரங்களில், இந்திய விமானங்களுக்கு 140 -க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், பயணிகளின் பாதுகாப்பு குறித்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற அச்சுறுத்தல்கள் குறித்து திறம்பட விசாரிக்க தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சைபர் பிரிவு, வெளிநாடுகளில் இருந்து வரும் இந்த மிரட்டல் அழைப்புகள் குறித்த விரிவான ஆய்வைத் தொடங்கியுள்ளது என்றும், அச்சுறுத்தல் அழைப்புகளுக்குப் பின்னுள்ள நோக்கங்களைக் கண்டறிவதில் விசாரணை கவனம் செலுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.