70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு ரூ. 5 லட்சம் வரையில் கட்டணமில்லா மருத்துவம் வழங்கும் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆயுஷ்மான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். முதியோர்களுக்கான மத்திய அரசின் தீபாவளி பரிசாக இந்த திட்டம் பாராட்டை பெற்று வருகிறது.
இந்த திட்டம் குறித்து கடந்த வாரம் அறிவிப்பு வெளியான நிலையில் பிரதமர் மோடி அதனை இன்று தொடங்கி வைத்துள்ளார். இதனை ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்று அழைக்கிறார்கள்.
இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை பணமில்லா கவரேஜை வழங்குகிறது. 70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைவருக்கும் இந்த காப்பீடு கிடைக்கும்.
சுமார் 6 கோடி மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்க தரவுகளின்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்களில் 58% பேர் பெண்கள், அவர்களில் 54% பேர் விதவைகள். இந்தப் பெண்களுக்கு இந்தத் திட்டம் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பேசிய மோடி, மத்திய அரசின் திட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு மைல் கல்லாக அமையும். இதன் மூலம் குடும்பத்தில் முதியோருக்கான மருத்துவ செலவுகள் குறையும் என்பதால் முழு குடும்பமுமே பலன் அடையும் என்று தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு மத்திய அரசு 60% நிதியை வழங்கும். மீதமுள்ள தொகையை அந்தந்த மாநில அரசுகள் ஏற்கும். மாநில அரசுகள் மற்ற வயதினருக்கும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தலாம் அல்லது திட்டத்தில் மாற்றங்களை செய்யலாம். சில மாநிலங்கள் ஏற்கனவே கூடுதல் செலவை ஏற்று கூடுதல் பயனாளிகளை சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளன.
Now, every senior citizen above the age of 70 will receive free treatment in hospitals. These senior citizens will be issued the Ayushman Vaya Vandana Card.
This scheme is expected to be a milestone. If an elderly person in the household has the Ayushman Vaya Vandana Card,… pic.twitter.com/wsC7SfVFht
— PIB India (@PIB_India) October 29, 2024
ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கூடுதல் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள். அதாவது கூடுதல் டாப்-அப் கவரேஜ் கிடைக்கிறது. சமூகப் பொருளாதார நிலை காரணமாக தற்போது மருத்துவக் காப்பீடு இல்லாத குடும்பங்களும் பயனடைவார்கள். இதற்கிடையில், உயர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் கவரேஜ் கிடைக்கும்.
.