முகூர்த்தம் டிரேடிங் (வர்த்தகம்) என்பது தீபாவளி சமயத்தில் இந்தியாவில் நடக்கக்கூடிய ஒரு சிறப்பு வர்த்தகம். பொதுவாக முகூர்த்தம் எனும் சொல் நல்ல நேரம் என்பதை குறிப்பதாக இருக்கிறது. இதனால், அந்த சமயத்தில் வர்த்தகம் செய்வதால், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு செழிப்பும், அதிர்ஷ்டமும் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
லாப கணக்கோடு மட்டுமின்றி, பங்குச் சந்தையில் புதிய ஆண்டை துவங்கும் விதமாகவும் முகூர்த்த வர்த்தகம் கொண்டாடப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட அந்தத் தினத்தில், ஒரு மணி நேரம் மட்டுமே நடக்கக் கூடிய வர்த்தகம். இந்த சமயத்திலும் பங்குச் சந்தை ஏற்ற இறக்குத்துடனே காணப்படும்.
முகூர்த்த வர்த்தகம் என்பது மும்பை பங்குச் சந்தையில் 1957ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1992ம் ஆண்டு முதல் நிஃப்டியிலும் இது கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
முஹுரத் வர்த்தகத்தின் முக்கிய அம்சங்களும் வர்த்தகத்தில் நடப்பவையும்:
சிறப்பு நேரம்: இந்து மதம் நாள்காட்டியின் அடிப்படையில் புது வருடம் துவங்கும் நாளான தீபாவளி அன்று மாலை ஒரு மணி நேரம் இந்த முகூர்த்த வர்த்தகம் நடைபெறும்.
சுப தினம்: இந்து மத கடவுளில் செல்வத்தை பிரதிபலிக்கும் கடவுளான லக்ஷ்மிக்கு இந்தத் தினத்தில் பூஜை செய்யப்படுகிறது.
வர்த்தகர்கள் மற்றும் தரகர்கள்: சிறு மற்றும் பெரும் முதலீட்டாளர்கள், நிறுவனம் முதலீட்டாளர்கள், குடும்ப வர்த்தக முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தகர்களும் இந்த முகூர்த்த வர்த்தகத்தில் பங்கேற்கின்றனர்.
இதையும் படியுங்கள் :
கேரள முதல்வர் சென்ற கார் திடீர் விபத்து – அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி
முன் கூட்டிய அறிவிப்பு: இந்திய பங்குச் சந்தைகளான நிஃப்டி மற்றும் மும்பை பங்குச் சந்தை ஆகியவை இந்த முகூர்த்த தின வர்த்தகத்தின் நேரத்தை முன் கூட்டிய அறிவிக்கும்.
2024 முகூர்த்த வர்த்தக நேரம் & தேதி:
2024ம் ஆண்டுக்கான முகூர்த்த வர்த்தகம் நவம்பர் 1ம் தேதி, மாலை 6.15 முதல் 7.15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முகூர்த்த வர்த்தகத்தின் முக்கியத்துவங்கள்:
செழிப்புக்கான அடையாளம்: செல்வ செழிப்பை வரவேற்கும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இது இருக்கிறது. சில வர்த்தகர்கள் இதனை புதிய வருடத்தின் துவக்கம் என்றும் சொல்கிறார்கள்.
உணர்வுகள் மீதான உத்தி: முதலீட்டாளர்கள் அதிகளவில் அன்றைய தினம் பங்குகளை வாங்க முற்படுவார்கள்.
சந்தை மீது நம்பிக்கை உணர்வு: இந்தத் தினத்தில் முதலீடு செய்வதன் மூலம், அதிக லாபத்தை பார்க்கலாம் என நம்பும் முதலீட்டாளர்கள். முகூர்த்த வர்த்தகத்தின் போது உற்சாகமாக காணப்படுவர்.
குறைந்த ஏற்ற இறக்கங்களும் அதிக உணர்வும்: சாதாரண சந்தை வர்த்தக தினத்தைவிட முகூர்த்த வர்த்தகத்தில் குறைவான பங்குகளே வாங்கப்படும். ஆனால், உணர்வு ரீதியாக இந்த முகூர்த்த வர்த்தகத்தில் பங்குகளை வாங்குவது அந்த வருடம் முழுக்க நல்லப்படியாக வர்த்தகம் நடைபெறும் என நம்பப்படுகிறது.
.