Tamil Live Breaking News: நவ.6ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Live Breaking News: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் – முதல்வர் வாழ்த்து!
“தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1!. தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்!” என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Tamil Live Breaking News: திருமலை தேவஸ்தானத்தின் புதிய தலைவர்!
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பொல்லினேனி ராஜகோபால் நாயுடுவை நியமித்து ஆந்திரப் பிரதேச அரசு உத்தரவு. கோயிலுக்கு 24 அறங்காவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Tamil Live Breaking News: மும்பை டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு!
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக பும்ராவுக்கு பதில் சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இஷ் சோதி, மாட் ஹென்றி அணியில் இடம்பிடித்துள்ளனர்.
விரிவாக படிக்க:
மும்பை டெஸ்ட் போட்டி… நியூசிலாந்துக்கு பதிலடி தருமா இந்தியா… விளையாட இருக்கும் மழை!
Tamil Live Breaking News: தமிழகத்தில் பட்டாசு விபத்துகளில் சிக்கி ஒருவர் மரணம், 544 பேர் காயம்!
தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்தபோது 254 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னையில் மட்டும் 102 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்ததில் 544 பேர் காயமடைந்துள்ளனர். அதேநேரம் ஒருவர் உயிரிழந்தார் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. எனினும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தீ விபத்துகள் குறைந்துள்ளதாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது
Tamil Live Breaking News: சென்னையில் மோசமடைந்த காற்றின் தரக்குறையீடு!
சென்னையில் காற்றின் தரக்குறையீடு மோசமடைந்துள்ளது. ஆலத்தூரில் காலை 6 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 222 ஆக உள்ளது. பெருங்குடி 234, வேளச்சேரி 222, கும்மிடிப்பூண்டி 220, அரும்பாக்கம் 168, மணலி 106 என்று காற்றின் தரக்குறியீடு உள்ளது. எனினும், சென்னையில் கடந்த ஆண்டை விட காற்றின் மாசு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Live Breaking News: அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பகல் 10 மணிவரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
Tamil Live Breaking News: ஈரோட்டில் துணிக்கடைகள் முன் அதிகாலையிலேயே குவிந்த மக்கள்!
ஈரோடு RKV சாலையில் உள்ள ஜவுளிக் கடைகளில் தீபாவளிக்கு மறுநாள் 50% சலுகை விலையில் துணிகளை விற்பனை செய்வது வழக்கம். அதனால் இன்று அதிகாலையிலேயே கடை வீதிகளில் திரண்ட பொதுமக்கள், முண்டியடித்துக் கொண்டு துணிகளை வாங்கிச் செல்கின்றனர். கூட்டம் அதிகரித்ததால் அதிகாலை 3 மணிக்கே விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
Tamil Live Breaking News: விருதுநகரில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து!
விருதுநகரில் பட்டாசு வெடித்த தீப்பொறி விழுந்ததில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகர் அல்லம்பட்டியில் ஹரிராம் என்பவருக்கு சொந்தமானது தீப்பெட்டி ஆலை. இதில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.15 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தீக்குச்சிகள் எரிந்து சேதம் ஆகியுள்ளன.
Tamil Live Breaking News: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இது நவம்பர் முதல்வார இறுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகவும் வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- First Published :