Tamil Live Breaking News: திமுகவை அழிப்பேன் என்று பல பேர் கிளம்பி இருக்கிறார்கள்

By
On:
Follow Us


November 7, 2024, 12:18 pm IST

Tamil Live Breaking News: திமுகவை அழிப்பேன் என்று பல பேர் கிளம்பி இருக்கிறார்கள் – உதயநிதி ஸ்டாலின்!

“திமுகவை அழிப்பேன் என்று பல பேர் கிளம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல தேவை இல்லை. நம்முடைய தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

November 7, 2024, 12:21 pm IST

Tamil Live Breaking News: அதிமுக பொதுக்குழு வழக்கு… நீதிபதி விலகல்!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விலகியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

November 7, 2024, 12:17 pm IST

Tamil Live Breaking News: ஈபிஎஸ் உடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் – மா.சுப்பிரமணியன் சவால்!

“ஆட்சிக்கு வந்த பின் சுகாதாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்.” என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிறுமி இறந்ததாக ஈபிஎஸ் குற்றம்சாட்டியது குறித்த கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
November 7, 2024, 10:47 am IST

Tamil Live Breaking News: அமெரிக்க அதிபருக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறிய மோடி!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம், பாதுகாப்பு, ஆற்றல், விண்வெளி மற்றும் பல துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவோம் என டொனால்ட் டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

November 7, 2024, 10:44 am IST

Tamil Live Breaking News: பிற்பகல் ஒரு மணி வரை 16 மாவட்டங்களில் மழை!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் பிற்பகல் ஒரு மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேபோல், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

November 7, 2024, 9:15 am IST

Tamil Live Breaking News: கமலுக்கு உதயநிதி பிறந்தநாள் வாழ்த்து!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை. கழகத்தலைவர் அவர்களின் அன்பு நண்பராக – கழகத்தோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதவாத – பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்!” என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
November 7, 2024, 9:11 am IST

Tamil Live Breaking News: கமல் பிறந்தநாளை முன்னிட்டு ‘தக் லைஃப்’ சிறப்பு போஸ்டர்!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ‘தக் லைஃப்’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

November 7, 2024, 7:16 am IST

Tamil Live Breaking News: 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

November 7, 2024, 7:10 am IST

Tamil Live Breaking News: சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை!

சென்னையில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. வடபழனி, கோடம்பாக்கம், சேப்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.

விளம்பரம்
November 7, 2024, 7:09 am IST

Tamil Live Breaking News: அமெரிக்க துணை அதிபர் வெற்றிக்கு இந்தியாவில் கொண்டாட்டம்!

அமெரிக்காவில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி. வேன்ஸ் மனைவியின் பூர்வீக கிராமத்தில் உறவினர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம். ஜே.டி. வேன்ஸ் மனைவி உஷாவின் பூர்வீகம் ஆந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

November 7, 2024, 7:07 am IST

Tamil Live Breaking News: அதிமுக முன்னாள் எம்பி மரணம்!

அதிமுக முன்னாள் எம்பியும், ஐஏஎஸ் அதிகாரியுமான மலைச்சாமி உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் அவர் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

November 7, 2024, 7:07 am IST

Tamil Live Breaking News: திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை அடுத்து திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மாலை 4.30 மணி அளவில் சூரசம்ஹார நிகழ்வு நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலின் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது.

விளம்பரம்
November 7, 2024, 6:46 am IST

Tamil Live Breaking News: தன்னம்பிக்கை

  • First Published :



நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements