A.R. Rahman: `அர்த்தத்தைத் தேடுகிறோம்!' – விவாகரத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சொல்வதென்ன?

By
On:
Follow Us

ஏ. ஆர். ரஹ்மானுடனான திருமண வாழ்வை முறித்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார் சாய்ரா பானு.

இதை தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருக்கிறார் சாய்ரா. ஏ. ஆர். ரஹ்மானுக்கும் சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு கதிஜா, ரஹீமா, ஆமீன் என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். 29 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண வாழ்விலிருந்து இருவரும் பிரிவதாக அறிவித்திருக்கும் இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏ.ஆர். ரஹ்மான்

விவாகரத்து குறித்து பதிவிட்டிருக்கும் ஏ. ஆர். ரஹ்மான், “திருமண வாழ்வில் முப்பது ஆண்டுகளை எட்டிவிடுவோம் என நம்பினோம். ஆனால் எதிர்பாரத முடிவு வந்துவிட்டது. கடவுளின் சிம்மாசனம்கூட, உடைந்த மனங்களின் கனத்தினால் சில விஷயங்களை சந்திக்கும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த உடைந்த சாப்டரை நாங்கள் கடந்து செல்வதற்கு எங்களின் ப்ரைவசிக்கு மரியாதை கொடுக்கும் நண்பர்களின் அன்புக்கு நன்றி. ” எனப் பதிவிட்டிருக்கிறார்.



நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements