மகாராஷ்டிர பேரவையில் குறைந்த பெண் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை!

By
On:
Follow Us

மும்பை: மகாராஷ்டிரம் மாநில பேரவையில் 24 பெண் பேரவை உறுப்பினர்கள் இருந்த நிலையில், 2024 பேரவைத் தேர்தலில் 21 பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பேரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த புதன்கிழமை (நவ. 20) தோ்தல் நடைபெற்றது. சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், ஆளும் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று மீண்டு ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த ஒருவரே முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிரம் மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கடந்த பேரவையில் 24 பெண் உறுப்பினர்கள் இருந்தனர். 2024 பேரவைத் தேர்தலில் 21 பெண் உறுப்பினர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அதாவது, பாஜகவில் 14 பெண் உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனா். அவர்களில் 10 போ் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்து மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். 2 போ் சிவசேனை கட்சியில் இருந்தும், 4 போ் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்தும், ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து என 21 பேர் வெற்றி பெற்று பேரவைக்கு தேர்வாகியுள்ளனா்.

தற்போது தேர்வாகியுள்ள புதிய பேரவை உறுப்பினர்களில் 59 சதவிகிதம் பேர் பட்டம் பெற்றவர்கள், 17 சதவிகிதம் பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements