அமெரிக்காவில் நாடுகடத்தப்படவிருக்கும் புலம்பெயர்ந்தோர் பட்டியலில் 18,000 இந்தியர்களும் அடங்குவர்.
அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தலை நிகழ்த்தவிருப்பதாக அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், நாடு கடத்தலுக்கு உட்படுத்தப்படும் சுமார் 1.5 மில்லியன் நபர்கள் கொண்ட பட்டியலை அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம் (US ICE) தொகுத்துள்ளது.
தயாரிக்கப்பட்ட பட்டியலில் 1.5 மில்லியன் நபர்களில் சுமார் 18,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்கள் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படும் அபாயமும் உள்ளது.
இதையும் படிக்க: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
கடந்த மூன்று நிதியாண்டுகளில் சராசரியாக 90,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைகளை கடக்க முயன்றபோது பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தியாவை கூட்டுறவு இல்லாத நாடு என அமெரிக்க ஏஜென்சி அறிவித்தது.
தங்கள் நாட்டினரைத் திரும்பப் பெறுவதை ஏற்றுக்கொள்வதில் ஒத்துழைக்காத நாடுகளை, ஒத்துழைக்காத அல்லது இணங்காத அபாயத்தில் உள்ள நாடுகள் என்று குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம் குறிப்பிடும்.