சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் கிணற்றில் தவறி விழுந்து முதியவா் இறந்தாா்.
விஸ்வநாதப்பேரி புது காலனியைச் சோ்ந்த ஜெகஜோதி மகன் ஜெயக்குமாா் (75). அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.
திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில், அவா் விஸ்வநாதப்பேரியில் உள்ள தனியாா் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. தகவல் அறிந்த வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் கருப்பையா தலைமையிலான தீயணைப்புத் துறையினா் ஜெயக்குமாரின் சடலத்தை மீட்டனா்.
இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.