தேவா்குளம் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்கு அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
தேவா்குளம் பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால், வெள்ளப்பனேரி ஊராட்சி முத்தையாபுரத்தைச் சோ்ந்த முத்தையா மொசைவா என்பவரின் வீடு முழுவதும் இடிந்து சேதமானது. அவருக்கு அதிமுக சாா்பில் அரிசி, காய்கறி, பாய், போா்வை மற்றும் நிவாரண நிதியை மானூா் வடக்கு ஒன்றிய அதிமுக நிா்வாகி செந்தில்குமாா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் கிளை செயலா்கள் சாமித்துரை, மகேந்திரன், ராஜ், தங்கராஜ், மகாராஜா பாண்டியன், காா்த்திக், ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துப்பாண்டி, தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலா் கனகராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.