பங்களாச்சுரண்டையில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ரமாதிலகம் முன்னிலை வகித்தாா்.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை செய்து, பணியைத் துவக்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் சுரண்டை நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், நகர திமுக பொறுப்பாளா் கணேசன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் மாரியப்பன், சந்திரசேகர அருணகிரி, வேல்முத்து, ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.